மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் நான்காவது எலெக்ட்ரிக் எஸ்யூவியாக XEV 9S மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது.
எரிபொருள் எஸ்யூவிக்களை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கே ‘XEV’ என்ற பெயரைப் பயன்படுத்துவோம் என முன்பே தெரிவித்துள்ளது மஹிந்திரா.
அந்த வகையில் புதிய XEV 9S எஸ்யூவியானது XUV 700-ஐ அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கார் வரும் 27ம் தேதியன்று அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
















