சூரிய குடும்பத்திற்கு வெளியே 620 ஒளி ஆண்டுகள் தொலைவில், தனித்துச் சுற்றி வரும் கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கோளானது வியாழன் கோளின் நிறையைப் போல 5 முதல் 10 மடங்கு வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாகக் கோள்கள் மெதுவாகவே உருவாகும் அல்லது வளர்ச்சி அடையும். ஆனால், இந்தக் கோள் ஒரு விண்மீனைப் போலச் செயல்படுவதாகவும், வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்குவதாகவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















