ஆர்ஜேடி அரசு பீகாரைக் கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தலின் கூடாரமாக மாற்றியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் சியாஹரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், நக்சல்கள் இல்லாத பீகாரில் முதன்முறையாக வாக்காளர்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்க இருக்கிறார்கள் என்றும், ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆட்சியின் கீழ், மாவோயிஸ்ட் பயம் காரணமாக வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரைதான் நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.
லாலுவின் ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் நிறைந்திருந்ததாக இருந்ததாகவும், நிதிஷ் குமார்- நரேந்திர மோடி மட்டுமே பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
















