2025 ஆம் ஆண்டில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானின் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்பே, பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாக இருந்தன.
பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 350க்கும் மேற்பட்ட பெரிய தாக்குதல், 20 சிறிய தாக்குதல் சம்பவங்களுக்கும் பலூச் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிற குழுக்களால் நடத்தப்பட்டதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்திய மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஜனவரி முதல் அக்டோபர் வரைப் பலூச் கிளர்ச்சியாளர்கள், தலிபான் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லபட்டுள்ளதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு பாகிஸ்தானில் அதிகப் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
			















