கட்சி சேர, ஆசக் கூட போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் GEN Z இளைஞர்களின் மனதைக் கவர்ந்த இளம் இசையமைப்பாளரும், பாடகருமான சாய் அபயங்கர் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். 2004ம் ஆண்டு பிறந்த சாய் அபயங்கர், பிரபல பின்னணிப் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் ஆவார்.
இளம் வயதிலேயே இசையின் மீது கொண்ட ஈடுபாட்டால், தனது இசையின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
சாய் அபயங்கரின் ‘கட்சி சேர’ பாடல் சர்வதேச அளவில் அதிகம் தேடப்பட்ட பாடல்களில் ஒன்றாக உள்ளது. சமீபத்தில் ட்யூட் படத்திற்கு இவர் இசையமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது சூர்யா, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளைப் பெற்று மிகவும் பிஸியான இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார் சாய் அபயங்கர்.
இந்நிலையில், சாய் அபயங்கரின் பிறந்தநாளில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
			















