நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு வரும் 17ஆம் தேதி வரைக் காவலை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே நாகை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் 31 பேரையும் கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனை அடுத்து, 31 மீனவர்களையும் வரும் 17ஆம் தேதி வரைச் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 31 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல, ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேரையும் வரும் 17ஆம் தேதி வரைச் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
			















