லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!
Jan 14, 2026, 03:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

தொழிலதிபராக உருவெடுக்கும் கரூர் இளைஞர்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டு, தைரியமாக FALOODA SHOP தொடங்கி, இன்று இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவெடுத்திருக்கிறார்க் கரூரை சேர்ந்த பிரதீப் கண்ணன். யார் இந்த இளைஞர்? . விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் கண்ணன். இளம் வயதில் இருந்தே தொழில்துறையில் ஏதாவது சாதனைப் படைத்திட வேண்டும் என்ற வேட்கையுடன் வளர்ந்த இளைஞர். ஆனால், அதற்கான பொருளாதாரம் இல்லாததால், அவரது கனவு நிறைவேறுவதில் தடை ஏற்பட்டது.

சிறுவயதில் இருந்தே கொண்டிருந்த லட்சியத்துக்குப் பணம் தடையாக இருக்கிறதே என்றெல்லாம் பிரதீப் கண்ணன் துவண்டு விடவில்லை. கல்வியே பேராயுதம் என்பதில் நம்பிக்கைகொண்டு படிப்பில் கவனம் செலுத்தினார். அவரது நல்ல எண்ணத்திற்கும் உழைப்பிற்கும் ஏற்ப, சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

பெங்களூருவில் உள்ள ORACLE INDIA நிறுவனத்தில் OPERATIONS HEAD வேலை. லட்சக்கணக்கில் சம்பளம். காலை 9 மணிக்கு அலுவலகம் சென்றால், மாலை 5 மணிக்கு வீடு திரும்பி விடலாம். ஒரு சாமானிய மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் சௌகரியத்தையும் அவர்ப் பெற்றிருந்தார்.

ஆனால், உறுதியான மனப்பான்மைக் கொண்டவரான பிரதீப் கண்ணனுக்கு, தொழிலதிபராக வேண்டும் எனும் லட்சியத்தீ மனதில் கொளுந்து விட்டு எரிந்தது. அதற்காக நிறுவனத்தில் நன்கு உழைத்து, தனது ஊதியத்தை உயர்த்திக் கொண்டே சென்றார். அதே வேளையில், எந்தத் தொழிலில் வெற்றிக் கிட்டும் என ஒரு புறம் யோசித்துக் கொண்டே இருந்தார்.

ஒரு சமயத்தில் பிரதீப் கண்ணனின் நீண்ட கால கனவு நிறைவேறுவதற்கான சூழல் பிறந்தது. கையில் லட்சக்கணக்கில் பணமும், FALOODA SHOP தொடங்கலாம் என்ற ஐடியாவும் கிடைத்தது. இதற்கு மேல் என்ன வேண்டும்…. வேலையை விட துணிந்தார் பிரதீப் கண்ணன். நம் நாட்டில் ஒருவர் வேலையை விடுவது என்ன அவ்வளவு சாதாரணமான விஷயமா? குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எனப் பல்வேறு தரப்பிடம் இருந்தும் நெருக்கடி.

நீ ஜெயித்துவிட்டால் சரி… ஒரு வேளைத் தோற்றுவிட்டால் என்ன ஆகும்? யோசித்துப் பார்… வேலையை விட்டு விடாதே என்ற வார்த்தைகளே பிரதீப் கண்ணனின் காதுகளில் அதிகம் விழுந்தன. இதற்கெல்லாம் அந்த இளைஞர் அஞ்சவில்லை. துணிந்து வேலையை ராஜினாமா செய்தார்.

சொந்த ஊரான கரூருக்குத் திரும்பிய அவர், FALOODA SHOP தொடங்கினார். ஆரம்பத்தில் எல்லோரையும் போல் தடுமாற்றம். போட்ட கைக்காசு வருமா? என்று யோசிக்கும் அளவுக்கு படுதோல்வி. ஆனால், பிரதீப் கண்ணன் முயற்சித்துக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தொழில் ரகசியம் பிடிபட கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார் கரூர் இளைஞர்.

இன்று அவரது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என்ன தெரியுமா? இந்தியா, துபாய் என 18 இடங்களில் FALOODA SHOP கிளைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. தற்போது   ice-cream BRAND-ஐ உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பிரதீப் கண்ணன், நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

Tags: பிரதீப் கண்ணன்karurTn newsPradeep Kannanwho threw away his salary of one lakh! A Karur youth who is emerging as a businessman
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

Next Post

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies