ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார் தேர்தலில் துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்றும் நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதற்கட்ட தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இன்றுடன் இறுதிகட்ட பிரச்சாரம் முடிவடைகிறது.
இந்நிலையில் தர்பனில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாத் பண்டிகையை அவமதித்தவர்களைப் பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார் தேர்தலில் துடைத்தெறியப்படும் என்றும் கூறினார்.
ராகுல் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஊடுருவல்காரர்களை ஆதரிப்பதாகவும், ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்யத்தை மீண்டும் மாறுவேடத்தில் கொண்டுவர முயற்சி நடப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
			















