பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது,” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
டெல்லி பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் இந்தியா வேகமாக முன்னேறும் காலத்தில் தாம் இருப்பதாகவும், இந்தியா அதன் மக்கள் தொகை மற்றும் அதன் புவியியல் ரீதியில் அமைப்பக்காக முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார்.
பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்பதாகவும், இந்தியாவை மையப்படுத்திய கொள்கை மற்றும் கொள்கை திட்டமிடலையும் தாம் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், வளரும் பொருளாதாரத்துக்கான மாடலை உருவாக்க வேண்டும் என்றும் விரைவில் இந்தியா உலகின் மிகப்பெரிய 3வது பொருளாதார நாடாக மாறும் என்றும் தெரிவித்தார்.
















