AI மூலம் கிளைமாக்ஸ் மாற்றப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைக்கப்படுகிறது. இதனால் சினிமாவில் AI தொழில்நுட்பம் வேண்டாம் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த AI தொழில் நுட்பம் எல்லா துறைகளிலும் வளர்ந்து வருகிறது.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்ட அம்பிகாபதி படத்தில் வரும் இறுதி காட்சிகளை மாற்றி அமைத்து வெளியிட்டனர்.
இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிலையில், AI தொழில் நுட்பம் சினிமாவில் பயன்படுத்துவது குறித்து இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், மனம் திறந்து பேசி உள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஆயிரத்தில் ஒருவன் 2, 7ஜி ரெயின்போ காலனி 2, புதுப்பேட்டை 2 படங்கள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
















