தங்கம் வென்ற கபடி வீரர் அபினேஷை நடிகர் துருவ் விக்ரம் நேரில் சந்தித்து பாராட்டினார்.
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்றது.
இதில், இந்திய ஆடவர் அணியில், திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் விளையாடி நெருக்கடியான நேரத்தில் வெற்றிக்கு வழி வகுத்தார்.
அதனைத் தொடர்ந்து, கபடி வீரர் அபினேஷை நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் துருவ் விக்ரம் வடுவூர் கிராமத்திற்கு சென்று உள் விளையாட்டரங்கில் பயிற்சி பெற்று வரும் அபினேஷை வாழ்த்தினார்.
















