அமெரிக்காவின் நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியினரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.
நியூயார்க் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் மீதான ஊழல் புகார் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிய மேயரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானியும் , குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிட்டனர்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்த மம்தானியே வெற்றி பெறுவார் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப், மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்துக்கு அதிக நிதி ஒதுக்க முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், நியூயார்க் மேயர் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் மம்தானி நியூயார்க் நகரத்தின் முதல் இஸ்லாமிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
















