அன்னாபிஷேகத்தை ஒட்டி கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அன்னம் சாத்துவதற்காக ஆயிரம் மூட்டைகள் அரிசியை கொண்டு சாதம் வடிக்கும் பணிகள் தொடங்கின.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலில் கடந்த 3ம் தேதி அன்னாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி ஐப்பசி மாத பௌர்ணமி தினமான இன்று, மாலை 6 மணிக்கு மூலவருக்கு சாதம் சாத்தப்பட்டு, காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
இதற்காக ஆயிரம் மூட்டைகள் அரிசியை கொண்டு சாதம் வடிக்கும் பணி தொடங்கி உள்ளது.அன்னாபிஷேக விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
















