ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஐப்பசி மாத பௌர்ணமி நேற்று இரவு 9.45 மணிக்கு தொடங்கி இன்று இரவு 7.29 மணிக்கு நிறைவடைய உள்ளது என்றும், நேற்றிரவு முதல் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ளலாம் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
இதனை தொடர்ந்து, ஐப்பசி மாத பௌர்ணமியின் இரண்டாம் நாளில் அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
















