தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி நகரப் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு உலகம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















