சென்னை தி.நகரில் நடைபெற்ற குருநானக் தேவ் பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
குருநானக் தேவ் பிரகாஷின் 556வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள குருநானக் சத் சங் சபாவில், புனித தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
அப்போது, ஆளுநரை குருநானக் சத் சிங் சபா நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இதனை தொடர்ந்து, புனித விழாவில் பங்கேற்ற ஆளுநர் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
குருநானக் தேவ் பிரகாஷின் புனித தினம் ஐந்து தலைமுறைகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிகழ்வில் ஆளுநர் பங்கேற்றது மிகப்பெரியது எனவும் குருநானக் சத் சங் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், புனித தின விழாவையொட்டி பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதான சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
















