சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவ – மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஏற்காடு அடுத்த வாழவந்தி கிராமத்தில் உள்ள அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் 42 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி இல்லாததால் நாள்தோறும் மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது.
இதையடுத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பள்ளியில் போர் வசதி ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் பழுதடைந்த நிலையில், சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் கடும் அவதிக்கு உள்ளான மாணவ – மாணவிகள், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
















