பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Sep 10, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2025, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்  என பாஜக தேசிய பொதுக்கழு  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஈரோடு மாவட்டம், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் மேற்கு மதில்சுவர் அருகே, திருக்கோயில் நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 3,150 சதுரடியில், வரும் 14.11.2025 முதல் 12.01.2026 வரை 60 நாட்கள், தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து கொள்ளும் உரிமத்திற்கான பொது ஏலம்/டெண்டர், ரூ. 16 லட்சத்திற்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஏலத்திற்கான நிபந்தனைகளில், 3 ஆவது நிபந்தனையாக, ஏலம் எடுத்தவரே உரிமத்தை அனுபவிக்க வேண்டும் என்றும், உள்வாடகைக்கு விட்டால், ஏலம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஏலத்தைக் கைப்பற்றியுள்ள பவானி திமுக நகரச் செயலாளருக்கு வேண்டப்பட்ட திமுகவினர், இங்குள்ள 34க்கும் மேற்பட்ட கடைகளை, ஒரு கடைக்கு 80,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்வாடகைக்கு விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், திருக்கோயிலுக்கு சுமார் ரூ. 20 லட்சத்துக்கும் மேல், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. வெறும் ரூ. 16 லட்சத்துக்கு ஏலம் கொடுத்துவிட்டு, விதிமுறைகளை மீறி, திமுகவினர் சுமார் 34 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்காக மட்டுமே இந்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் கொள்ளையும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீதே சுமத்தப்படும். திமுக ஆட்சியில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை, முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதே தவிர, ஆலய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை.

அறநிலையத்துறை அமைச்சருக்கு, தனது துறையின் முறைகேடுகளைக் கவனிக்க நேரமில்லை. கட்சியில் யார் பெரியவர் என்ற போட்டியில் மட்டுமே கவனமிருக்கிறது. உள்வாடகைக்கு விட்டால், ஏலம் ரத்து செய்யப்படும் என்ற ஏல நிபந்தனைகளின்படி, உடனடியாக, பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் ஏலத்தை ரத்து செய்து மறு ஏலம் விட வேண்டும் என்றும், அறநிலையத் துறையை திமுகவினர் கொள்ளையடிக்கும் துறையாக மாற்றியிருப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: Annamalai Press Meetbjp annamalai latestBhavani Sangameshwarar Templetemporary shop auctionbjp annamalaiannamalaiannamalai bjpannamalai speech
Share
Tweet
SendShare
Previous Post

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

Next Post

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies