சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
வெளியூர்களில் இருந்து மினி சரக்கு லாரியில் இறால் கழிவுகள் கொண்டுவரப்பட்டு இங்கு கொட்டப்படுவதாகவும் இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்றும் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் இறால் கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















