ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலையிலேயே மலை அடிவாரத்தில் காத்திருந்தனர்.
பின்னர் காலை 6 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரவில் மலைக்கோயிலில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.
















