முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது, பதியவும் முடியாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த இஸ்லாமிய நபர், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே 2-வது திருமணம் செய்த நிலையில், அதை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதை எதிர்த்து அந்நபர் தொடர்ந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்ய அனுமதி உள்ளதால், தன்னுடைய 2-வது திருமணத்தை பதிவுசெய்ய அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என அந்த நபர் கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதென தெரிவித்தார்.
இரண்டாவது திருமணத்தை எதிர்க்கும் பெண்களின் கருத்தை புறக்கணிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது, பதியவும் முடியாது என தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
















