தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தென்னமநாடு கிராமத்தை சேர்ந்த கதிர்வேல், தஞ்சையில் உள்ள தனது நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, கதிர்வேலின் வாகனம் மீது மோதியது. இதில், கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கதிர்வேலின் உறவினர்கள், தவறான பாதையில் வந்து விபத்து ஏற்படுத்தியதாக கூறி பேருந்து கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்டதால் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















