விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான மனுவுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆட்சியரிடம் பெண் ஒருவர் ஆவேசமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
நதிக்குடி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அதிமுக பிரமுகர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், கொங்கன்குளம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நிகழ்ச்சிக்கு வந்த ஆட்சியரிடம், மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது குறித்து நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆவேசமாக பேசியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















