ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நம் ராணுவம், ஆபரேஷன் “சிந்துார்” நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்தநிலையில் இந்திய ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க, லஷ்கர் – இ – தொய்பா மற்றும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதற்காக லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தங்களது ஆதரவாளர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கி உள்ளனர்.
இந்த முறை தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் ஊடுருவல்களை அதிகப்படுத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
















