ரயிலில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளின் வசதிக்காகச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் M -UTS சகாயக் எனும் புதிய திட்டத்தைத் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளுக்குப் பேருதவியாக அமைந்திருக்கும் இந்தத் திட்டம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்
பயணிகளுக்குக் குறைவான கட்டணத்தில் நிறைவான பயணத்தைத் தருவதுதான் ரயில்வே சேவையின் முக்கியமான நோக்கம். அத்தகைய ரயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காகவும், டிக்கெட் கவுண்டர்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் இணையதளத்தின் மூலமாகவும் செயலி மூலமாகவும் டிக்கெட் பெறும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருந்தது.
பயணிகளின் போக்குவரத்து சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் தொடங்கியிருப்பது தான் இந்த M-UTS சகாயக் திட்டம்… தெற்கு ரயில்வேயின் இந்தப் புதிய திட்டம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் கவுண்டர்களுக்கு அருகிலேயும், பயணிகள் அதிகமாக நடமாடும் இடத்திலும் நிற்கும் இந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரிடம், நாம் செல்லும் இடத்தையும், தொலைபேசி எண்ணையும் கூறினால் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டை எளிமையாகப் பெற முடியும். இதற்கெனப் பயிற்சி பெற்றவர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டிக்கெட் கவுண்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதோடு, பயணிகளுக்கு விரைவான சேவையை வழங்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தத் திட்டம் தங்களது பயணத்தை எளிமையாக்க உதவுவதாகப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த M-UTS சகாயக் திட்டம் நாடு முழுவதும் உள்ள 5 முக்கியமான ரயில்நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
இந்தத் திட்டம் விரைவில் அனைத்து ரயில்நிலையங்களிலும் செயல்படுத்த இருப்பதால் பண்டிகை காலங்களில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குப் பேருதவியாக அமையும் எனக் கருதப்படுகிறது.
பயணிகளுக்குக் குறைவான கட்டணத்தில் நிறைவான பயணத்தைத் தருவதுதான் ரயில்வே சேவையின் முக்கியமான நோக்கம். அத்தகைய ரயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காகவும், டிக்கெட் கவுண்டர்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் இணையதளத்தின் மூலமாகவும் செயலி மூலமாகவும் டிக்கெட் பெறும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருந்தது.
பயணிகளின் போக்குவரத்து சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் தொடங்கியிருப்பது தான் இந்த M-UTS சகாயக் திட்டம். தெற்கு ரயில்வேயின் இந்தப் புதிய திட்டம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களுக்கு அருகிலேயும், பயணிகள் அதிகமாக நடமாடும் இடத்திலும் நிற்கும் இந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரிடம், நாம் செல்லும் இடத்தையும், தொலைபேசி எண்ணையும் கூறினால் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டை எளிமையாகப் பெற முடியும்.
இதற்கெனப் பயிற்சி பெற்றவர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிக்கெட் கவுண்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதோடு, பயணிகளுக்கு விரைவான சேவையை வழங்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தத் திட்டம் தங்களது பயணத்தை எளிமையாக்க உதவுவதாகப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த M-UTS சகாயக் திட்டம் நாடு முழுவதும் உள்ள 5 முக்கியமான ரயில்நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் விரைவில் அனைத்து ரயில்நிலையங்களிலும் செயல்படுத்த இருப்பதால் பண்டிகை காலங்களில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குப் பேருதவியாக அமையும் எனக் கருதப்படுகிறது.
















