இந்தியக் கடற்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS இஷாக் என்ற பெரிய ஆய்வுக் கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் வழித்தடங்கள் மற்றும் கடற்கரை, ஆழ்கடல் பகுதிகளில் முழுமையான நீரியல் ஆய்வுகளை மேற்கொள்வது இந்தக் கப்பலின் முதன்மை கடமையாகக் கூறப்படுகிறது.
அதிக தெளிவுத்திறன் கொண்ட மல்டி-பீம் எக்கோ சவுண்டர், தன்னாட்சி நீர்மூழ்கி வாகனம், தூரநிலை இயக்கப்படும் வாகனம் மற்றும் நான்கு சர்வே மோட்டார் படகுகள் போன்ற அதிநவீன ஆய்வு மற்றும் கடலியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல், கடல்வழிப் பாதைகளை வரைபடமாக்கி, கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகள் மட்டுமின்றி, அவசரகாலத்தின்போது மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண தளமாகவும், மருத்துவமனை கப்பலாகவும் செயல்படும் திறன் கொண்டது.
இந்தக் கப்பல், இந்தியாவின் விரிவான கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















