தமிழகத்தில் திமுக அரசுக்குப் பாஜக முடிவுரை எழுதும் என, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பயணம் பிரசாரத்தின் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
விவசாயிகள் மற்றும் நெசவாளர்களிடம் குறைகளைக் கேட்டறியும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன், அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உதயநிதியை முதலமைச்சராக்க இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டுமென ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக அரசுக்குப் பாஜக முடிவுரை எழுத உள்ளதாகவும் கூறினார்.
















