திருப்பத்தூர் மாவட்டம் மாமுடிமானப்பள்ளியில் சேதமடைந்த குடிநீர் தேக்க தொட்டியை உடனே சீரமைத்து தரவேண்டுமெனக் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
12 ஆண்டுகளிலேயே குடிநீர் தொட்டியில் சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழுந்து கம்பிகள் தெரிவதாகக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுசுவர் இல்லாததால் சிலர் அங்குச் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
















