தனக்கு தமிழ் என்றால் மிகவும் பிடிக்கும் என மலையாள நடிகர் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் காந்தா.
இந்தப் படம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், காந்தா டிரைலரை படக்குழு வெளியிட்டனர்.
அப்போது பேசிய துல்கர் சல்மான், தனக்கு தமிழ் என்றால் அவ்வளவு பிடிக்கும் எனவும், பள்ளியில் படிக்கும்போது 3-வது மொழியாகத் தமிழ் தான் படித்தேன் எனவும் கூறினார்.
மேலும், தனது மலையாளத்தை விடத் தமிழ் மொழியின் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது எனச் சிலர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
துல்கர் சல்மானின் பேச்சு அவரது தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
















