ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டில் தொடர்புடைய பிரேசிலிய மாடலான லாரிசா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி நடந்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
அப்போது பேசிய அவர், சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களில் 22 முறை வாக்களித்ததாகக் கூறப்படும் பிரேசிலிய மாடலின் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் பல முறை இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பிரேசிலிய மாடல் யார் என நெட்டிசன்கள் மிகவும் ஆர்வத்துடன் தேடினர்.
இந்நிலையில் ராகுல் கூறிய பிரேசிலிய மாடலான லாரா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், இந்திய அரசியலுக்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும், தனது புகைப்படம் ஒரு ஸ்டாக் இமேஜ் தளத்திலிருந்து வாங்கப்பட்டு அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பிரச்னையால் தனக்கு அதிக இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ்கள் கிடைத்துள்ளதாகவும், தான் இந்திய மக்களை நேசிக்கிறேன் எனவும் லாரா தெரிவித்துள்ளார்.
















