இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களின் எண்ணிக்கைகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முரண்பாடான தகவல்களை தெரிவித்து மீண்டும் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்.
ஆரம்பத்தில் ஐந்து விமானங்கள் என்றும், பிறகு ஏழு விமானங்கள் என்றும் கூறிவந்த டிரம்ப், தற்போது ஆபரேஷன் சிந்தூரில் எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த இந்தியா, ஆப்ரேஷன் சிந்தூரின் போது அமெரிக்க தயாரிப்பான F-16கள், சீன தயாரிப்பான JF-17கள் உட்பட 8 முதல் 10 பாகிஸ்தான் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக டிரம்புக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
















