ஆட்சிக்கு வந்தவுடன், ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சுல்தான்பேட்டை பகுதியில் நயினார் நாகேந்திரன் விவசாயிகளைச் சந்தித்து உரையாடினார். அப்போது, விவசாயிகளின் குறைகள் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கேட்டறிந்தார். ஆனைமலை நல்லாறு திட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமிதான் அடித்தளம் அமைத்ததாகவும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தையும் அவர்தான் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில், திமுக மற்றும் காங்கிரசை சேர்ந்த 50 பேர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு அணிவித்து நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
















