கோவையில் இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்ட காட்சி சிசிடிவியில் வெளியாகி உள்ளது.
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை எற்படுத்தியது. இந்தநிலையில் அச்சம்பவம் நடைபெற்ற ஒருவாரத்திற்குள், இருகூர் அடுத்த தீபம் நகரில் இளம்பெண் ஒருவரை, மூன்று பேர் கொண்ட கும்பல், காரில் கடத்தி சென்றுள்ளது.
அப்போது பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு, பகுதிவாசிகள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். எனினும் கார் அதிவேகமாக சென்றதால், அவர்களால் பெண்ணை மீட்க முடியவில்லை. உண்மையிலேயே இளம்பெண் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















