ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிட கூறிய, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீகாகுளம் பகுதியில் பழங்குடியினர் பெண்கள் உண்டு உறைவிட பள்ளியில் தலைமை ஆசிரியையின் கால்களை மாணவிகள் பிடித்துவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வீடியோ வைரலான நிலையில், தலைமை ஆசிரியை சுஜாதா மற்றும் பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
















