சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தோணிக்கும், நொச்சிக்குப்பம் பெண் மீன் வியாபாரிக்கும் திருமணம் தாண்டிய உறவில்
இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள், அந்தோணியை எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இரவு சென்னை மெரினா காவல்நிலையம் அருகே உள்ள மணல் பரப்பில் அந்தோணி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அந்தோணியை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
















