சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்களை நிறுத்த வசதியில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வந்து செல்வதில் பெரும் சிரமமாக இருப்பதாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு கடைகளால் வாகன நிறுத்தம் இடமில்லை எனவும் குற்றம்சாட்டினர். விசேஷ காலங்களில் கட்டுக்கடங்காத கூட்டத்தின் போது நடப்பதற்கே சிரமப்படுவதாகவும், ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து மாநகராட்சியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், கோயிலை சுற்றியுள்ள ஆக்கிமிரப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















