தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது என தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக போலி வாக்காளர்கள் நீக்கப்படுவர் எனவும் ஆனால் இதற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் சட்ட- ஒழுங்கு சீர்கேட்டிருப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
















