வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் பாஜக சார்பில் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, வந்தே மாதரம் பாடலை பாடி, பாஜக தொண்டர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழிசை சௌந்தரராஜன், சுதேசி உணர்வுடன் நாம் அனைவரும் அரட்டை செயலிக்கு மாறி வருவதாகவும், ஆனால் ராகுல் காந்தி சுதேசிக்கு மாறாக விதேசியாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார் எனவும் தெரிவித்தார். வாக்காளர் திருத்த பணியை கண்டு திமுக ஏன் அஞ்சுகிறது என கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுகவை விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆர்.பி.உதயகுமார் தவெக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வர வேண்டும் என கூறியிருப்பார் என தமிழிசை தெரிவித்தார்.
















