சமூகம் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நெலே அறக்கட்டளையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டங்களால் மட்டுமே சமூகம் இயக்கப்படுவதில்லை என தெரிவித்தார். மாறாக சமூகம், கருணையை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும் அவர் கூறினார்.
நம் இதயங்களில் உணர்வினை, நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நமக்குள் இருக்கும் தீபம் ஏற்றப்படும்போது, அந்த ஒளி அனைவரின் இதயங்களிலும் பரவுவதாகவும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
முன்னதாக மைசூர் சாலையில் உள்ள ஸ்ரீ கலி ஆஞ்சநேயர் கோயிலுக்கு மோகன் பாகவத் வருகை தந்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோயிலில் மனமுருகி வழிபாடு நடத்தினார்.
















