பீஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் அமையும் என்பதை, வழக்கத்தை விட அதிக வாக்குகள் பதிவாகி எடுத்துரைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீஹாரின் அவுரங்காபாத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகளின் பொய்களை மக்கள் நிராகரித்துள்ளதாகவும், முதற்கட்ட தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் கூறினார்.
காட்டாட்சி ராஜ்ஜியத்தை பீகார் மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை எனக்கூறிய பிரதமர் மோடி, தன் மீதும், நிதிஷ் குமாரின் சாதனைகள் மீதும் பீகார் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ராமர் கோவில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் , ஆப்ரேஷன் சிந்தூர் என தான் உறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்றி வருவதாக பெருமிதத்துடன் கூறிய அவர், ஆர்.ஜே.டி., காங்கிரசின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்பாததால், அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
















