சென்னையில் 4 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியை சீனியர் ஆடிட்டர் கையாடல் செய்து தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது.
அண்ணா நகரில் வசித்து வந்த மத்திய அரசு அதிகாரி நவீன் கண்ணன். தனது மகனை கழுத்தை நெரித்து கொன்று விட்டு மனைவியை கழுத்தை அறுத்து விட்டு ரயில் முன் பாய்ந்து கடந்த 27 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
சீனியர் ஆடிட்டரான அவர் 4 கோடி ரூபாயை கையாடல் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான விரிவான அறிக்கையை தனது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
இதனைதொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மோசடி தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர்.
















