மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே போதையில் இளைஞர்கள் சிலர் தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசலங்குடி பகுதியில் தனியார் பள்ளியின் மினி பேருந்து மாணவர்களை இறக்கி விடுவதற்காக சென்றுள்ளது. அப்போது பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் 3 பேர், மதுபோதையில் கண்ணாடி மீது கல் வீசி தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த மாணவர்கள் பயத்தில் அலறினர்.
இச்சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















