திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றம் நடைபெறுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60ஆம் ஆண்டு மணி விழா மயிலாடுதுறை அருகே நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில், 6 ஆயிரத்து 700 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். தற்போது மக்களின் மனநிலை திமுக அரசுக்கு எதிராக உள்ளதாகவும் இதனால் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் வாக்களிப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
















