முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று 98வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சுதந்திரத்துக்கு முந்தைய ஒருங்கிணைந்த இந்தியாவின் கராச்சியில் பிறந்த எல்.கே.அத்வானி இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் தொண்டராக சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். பாஜகவை உருவாக்கியதில் இவரின் பங்கு அளப்பரிவை. இவர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உள்துறை அமைச்சர் மற்றும் இந்தியாவின் துணை பிரதமர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை விகித்தவர்.
வயது மூப்பு காரணமாக தீவிர கட்சிப் பணிகளில் இருந்து அண்மைக் காலமாக அவர் விலகி உள்ளார். இந்தநிலையில் எல்.கே.அத்வானி, இன்று தனது 98வயதில் அடித்து எடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், எல்.கே.அத்வானி நாட்டின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் என புகழாரம் தெரிவித்துள்ளார். அத்வானி நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அத்வானி சிறந்த அரசியல்வாதி, தொலைநோக்கு பார்வை கொண்டவர், உண்மையான தேசபக்தர் என தெரிவித்துள்ளார்.
பாரதத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் என்றும், அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்வதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
















