தூத்துக்குடியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களது கனவை நிறைவேற்றினார்.
பண்டாரம் பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்ற நெல்சன் பொன்ராஜ் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், தனது பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களை சொந்த செலவில், விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களின் கனவை நனவாக்கி வருகிறார். அந்த வகையில், தனது பள்ளியில் படிக்கும் 11 மாணவ மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் 6 பேர் என மொத்தம் 20 பேரை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் நல்லாசிரியர் பொன்ராஜ் ஆகியோரை பாராட்டினார்.
















