பிரேசிலில் பெட்ரோல் பங்க் அருகே சாலையோர ஓட்டலில் அமர்ந்த நபர் சிகரெட்டை பற்ற வைத்துத் தீக்குச்சியை கீழே போட்டபோது நெருப்பு பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேசிலின் டிமோனில் பெட்ரோல் பங்க் அருகே சாலையோர உணவகத்தில் 4 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது நான்கு பேரில் ஒருவர் சிகரெட் பற்றவைத்து தீக்குச்சியை கீழே போட்டார். அப்போது திடீரெனத் தீப்பரவியதால் நான்கு பேரும் ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் அருகே கொளுந்துவிட்டு எரிந்த தீயை பெட்ரோல் பங்க் ஊழியர் தீயணைப்பானை பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
















