மறுவெளியீட்டில் விஜய்யின் கில்லி, ஹிந்தி படமான தும்பாட் ஆகியவற்றைப் பின்னுக்குத்தள்ளி பாகுபலி தி எபிக் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டக்குபதி, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இணைத்துப் பாகுபலி தி எபிக் என்ற பெயரில் கடந்த 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் முதல்நாள் டிக்கெட் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், மொத்தமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 31 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத தகவல்கள் வெளியாகியுள்ளன.
















