திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாணியம்பாடியில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், அரசு மருத்துவமனை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் நீடித்தது.
இந்நிலையில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி தலைமையிலான குழுவினர் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், மழைநீர் செல்ல நிரந்தர வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என்றும், ஆணையர் கஜலட்சுமி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
















