கன்னியாகுமரி மாவட்டம் முட்டைகாடு பகுதியில் தேவாலய பங்கு தந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முட்டைகாடு பகுதியில் சென் சேவியர் தேவாலயம் அமைந்துள்ளது. இதன் பங்கு தந்தை ஜோசப் ஜெயசீலன் 22 லட்ச ரூபாய் முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி குழித்துறை மறை மாவட்ட ஆயர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
















