அண்டை மாநிலங்களில் பயிர்கழிவுகள் எரிக்கப்படுவதால் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையில் இருக்கிறது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்கு பிறகு வைக்கோல் உள்ளிட்ட பயிர் கழிவுகளை எரிப்பதால் பரவும் புகை டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.
இதனால் டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் என்ற நிலைக்குச் சென்றுள்ளது.
இந்நிலையில் டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் 322 என்ற அளவில் காற்றின் தரம் மிகவும் மோசமாகப் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
















